internet

img

ஹூவாய் ஸ்மார்ட் போன்களுக்கு இனி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் கிடையாது

ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் இனி ஃபேஸ்புக் செயலிகள் முன் நிறுவல் (Pre-installation) செய்யப்படாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஹூவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா விதித்த தடையை அடுத்து, கூகுள், இண்டெல், குவால்கம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்துடனான வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலிகளான ஃபேஸ்புக், மெசன்ஜர், வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் ஹூவாய் ஸ்மார்ட் போன்களில் இனி முன் நிறுவல் செய்யப்படாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது ஹூவாய் போன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த சேவை தொடர்ந்து வழங்கப்படும்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால், ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் விற்பனை பெரிதும் பாதிக்கப்படும் என்றும், இது அந்த நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.